அனைத்து சீன மக்களுக்கும் வசந்த விழா வாழ்த்துக்கள்

2018-02-13 20:06:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அனைத்து சீன மக்களுக்கும் வசந்த விழா வாழ்த்துக்கள்

சீனப் பாரம்பரிய வசந்த விழா வருவதற்கு முன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ கமிட்டியின் தலைவருமான ஷி ச்சின்பிங் சிச்சுவான் மாநிலத்தில் பணி பயணம் மேற்கொண்டுள்ளார்.

லியாங்சான் யீ இனத் தன்னாட்சிச் சோ, அபா திபெத் மற்றும் சியாங் இன தன்னாட்சிச் சோ, செங்து நகரம் முதலிய பிரதேசங்களுக்குச் சென்று, உள்ளூர் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி நிலைமை, வறுமை ஒழிப்பு முதலிய பணிகளை அவர் சோதனையிட்டு, உள்ளூர் மக்களுடன் உரையாடினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மாநாடு, மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டம், மத்திய கிராமப்பணி கூட்டம் ஆகியவற்றின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் நிலைமையை அவர் கண்டறிந்தார்.

தவிரவும், நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களுக்கு அவர் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்