சீனாவின் வணிக அமைப்பு முறை சீர்திருத்தம்

2018-03-01 15:22:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவையின் சீர்திருத்தக் கோரிக்கையின்படி, சந்தை நுழைவு அமைப்பு முறையை சீனத் தேசியத் தொழில் மற்றும் வணிகப் பணியகம் மேலும் சீர்திருத்தம் செய்து, நியாயமற்ற விதிகளை நீக்கி, வணிக சூழலை மேம்படுத்தி, ஊற்றுமூலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உரிய புதிய இயக்கு ஆற்றலை ஊட்புகுத்தி, வளர்ச்சி முறை மாற்றம், பொருளாதார கட்டமைப்பு மேம்பாடு, அதிகரிக்கும் இயக்கு ஆற்றலின் மாற்றம் ஆகியவற்றை முன்னேற்ற உள்ளதாக சீன அரசவை செய்தி அலுவலகம் மார்ச் முதல் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை நுழைவைத் தளர்த்துவது, சந்தை கண்காணிப்பு அமைப்பு முறையை மேம்படுத்துவது, சிறிய மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிப்பது முதலிய மூன்று துறைகளில் வணிக அமைப்பு முறை சீர்திருத்தத்தைச் சீனா ஆழமாக்கும் என்று சீனத் தேசியத் தொழில் மற்றும் வணிகப் பணியகத்தின் தலைவர் சாங் மெள செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்