சீனாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி பற்றிய வழிகாட்டியையும் வரையறையையும் சீனா வெளியிடவுள்ளது. பொருளாதார சமூக வளர்ச்சியின் பல்வேறு துறைகளில், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதைச் சீனா முன்னேற்றும். அதேவேளையில், சீனாவின் செயற்கை நுண்ணறிவு தொழில் நிறுவனங்களும், ஆய்வு நிறுவனங்களும், சர்வதேச செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, பங்காற்றுவதற்குச் சீனா ஆதரவு அளிக்கும் என்று சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் வன் காங் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.