சீன அரசுத் தலைவர்-தென் கொரிய அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் சந்திப்பு

2018-03-12 20:06:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 12ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் தென் கொரிய அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் ச்சுங் யீ யூங்கைச் சந்தித்து பேசினார்.

தென் கொரியாவும் வட கொரியாவும் இருதரப்புறவை மேம்படுத்தி, இணக்கமான ஒத்துழைப்பை முன்னேற்றுவதை சீனா ஆதரித்து வருகிறது. அமெரிக்காவும் வட கொரியாவும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரித்து வருகிறது. கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்குவது, சீனாவின் நிலைப்பாடாகும். தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, தொடர்புடைய பணிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என சீனா விரும்புவதாக ஷீ ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்