சீன அரசு வாரியங்களின் சீர்திருத்தம்

கலைமணி 2018-03-13 16:58:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசு வாரியங்களின் சீர்திருத்த திட்டம், 13ஆம் நாள், 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, சீன அரசவை, 27 வாரியங்களாக உருவாக்கப்படும். இவற்றில், புதிதாக உருவாக்கப்படும் இயற்கை மூலவள அமைச்சகம், உயிரினச் சுற்றுச்சூழல் அமைச்சகம், வேளாண் துறை மற்றும் கிராம அமைச்சகம், பண்பாடு சுற்றுலா அமைச்சகம், தேசிய சுகாதார ஆரோக்கிய ஆணையம், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அலுவல் அமைச்சகம் ஆகியவை சீன அரசவையில் அடங்கும். 8 அமைச்சர் நிலை வாரியங்களும், 7 துணை அமைச்சர் நிலை வாரியங்களும் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்