ஆதார் எண் இணைப்புக்கான காலம் காலவரம்பின்றி நீட்டிப்பு

பண்டரிநாதன் 2018-03-14 10:58:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்கிக் கணக்கு மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைப்தற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தனது இடைக்காலத் தீர்ப்பில், காலவரம்பின்றி நீடித்துள்ளது. ஆதார் இணைப்புக்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் உச்சநீதி மன்றம்  உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கான காலக்கெடு காலவரம்பின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி ஆதார் செல்லுபடியாகுமா என்ற வழக்கு 5 நபர்கள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்பு வரும்வரை, மானியம் அளிப்புக்குத் தவிர, மற்றவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்