தேனி காட்டுத் தீ விபத்து – சுற்றுலா வழிகாட்டி கைது

பண்டரிநாதன் 2018-03-14 10:58:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, 30 வயதான சுற்றுலா வழிகாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இம்மலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 40 பேர் சிக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, மலைக்கு அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்