பாகிஸ்தானில் சீனாவின் எண்ணியல் நிதிச் சேவை நிறுவனம்

பண்டரிநாதன் 2018-03-14 10:59:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் முக்கியமான எண்ணியல் நிதிச் சேவை நிறுவனமான ஏன்ட் குழுமம், பாகிஸ்தானில் 18.45 கோடி டாலரை, அலைபேசிவழி பணம்-செலுத்தல் சேவையான “ஈஸிபைசா”-வில் செவ்வாய்க்கிழமை முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானில் அலைபேசி வழி வர்த்தகமும், எண்ணியில் நிதிச் சேவையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸிபைசாதான் பாகிஸ்தானில் முதன்முறையாக சேவைக்கு வந்த அலைபேசிவழி பணம்-செலுத்தல் சேவை மேடையாகும். இது 2009இல் தொடங்கப்பட்டது. ஈஸிபைசா, நார்வேயின் டெலினார் குழுமத்தைச் சேர்ந்தது. தற்போது, ஈஸிபைசாவுக்கும், சீனாவின் ஏன்ட் குழுமத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனை பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷாகிர் ஹான் அப்பாஸி வரவேற்றுள்ளார்.

ஏன்ட் குழுமத்தின் நிதிச்சேவை, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்கெனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்