சீன-இந்திய பொருளாதாரக் கூட்டமைப்பு

2018-03-27 10:00:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வணிக அமைச்சர் சொங் சான், இந்திய வணிக மற்றும் தொழில் அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகிய இருவரும், மார்ச் 26ஆம் நாள், புதுதில்லியில், சீன-இந்திய பொருளாதார கூட்டமைப்பின் 11ஆவது கூட்டத்திற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.

வளர்ச்சி என்பது சீனா மற்றும் இந்தியாவின் பொது நெடுநோக்கு இலக்காகும். இந்தியாவுடனான பொருளாதார வர்த்தக உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தி ஆழமாக்குவது சீனாவின் உறுதியான கொள்கை என்று சொங் சான் சுட்டிக்காட்டினார்.

இரு நாட்டுப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு குறித்து பேசிய சொங் சான், வளர்ச்சி நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்துவது, இரு தரப்புகளுக்கிடையில் வர்த்தக முதலீட்டு ஒத்துழைப்பை முன்னேற்றுவது, பல தரப்பு மற்றும் பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட 7 முன்மொழிவுகளை வழங்கினார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, சீனாவுடன் சேர்ந்து நெடுநோக்குத் திட்டங்களை இணைத்து, வளர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இந்தியா விரும்புவதாக சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

முன்னதாக, இவ்விரு அமைச்சகங்களும் புதுதில்லியில், சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி, சீன-இந்திய வர்த்தகத் திட்டப்பணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் விழா முதலியவற்றை நடத்தின. இரு தரப்புகளின் தொழில் நிறுவனங்கள், 101 வர்த்தக உடன்படிக்கைகளில் கையொமிட்டுள்ளன. இதன் வர்த்தகத் தொகை 236 கோடியே 80 இலட்சம் அமெரிக்க டாலராகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்