சீனாவில் பன்முகங்களிலும் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் பணி

தேன்மொழி 2018-03-29 09:32:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவரும், ஒட்டுமொத்தச் சீர்திருத்தத்தை ஆழமாக்குவதற்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் தலைவருமான ஷிச்சின்பீங், மார்ச் 28-ஆம் நாள் பிற்பகல் ஒட்டுமொத்தச் சீர்திருத்தத்தை ஆழமாக்குவதற்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் முதலாவது கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி முக்கிய உரைநிகழ்த்தினார். கட்சி மற்றும் நாட்டு நிறுவனங்களின் சீர்திருத்தத்தை ஆழமாக்கும் பணி பன்முகங்களிலும் துவங்கியுள்ளது. இந்தப் பணி புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதை இது காட்டுகிறது என்று ஷிச்சின்பீங் தெரிவித்தார். மேலும், சீர்திருத்தம் மூலம், அக்கறை மற்றும் அமைப்புமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும். சீர்திருத்தத்தின் சிக்கல் தன்மை, கூருணர்வு தன்மை, கடின தன்மை ஆகியவை மேலும் தெளிவாக காணப்படும். இந்நிலைமையில், பன்முகங்களிலும் சீர்திருத்தத்தை ஆழாக்கும் பணிக்கான கட்சியின் தலைமைப் பங்கினை அதிகரிப்பதோடு, ஆழந்த முறையில் நாட்டு நிறுவனத்தின் சீர்திருத்தப் பணியுடன் நெருக்கமாக இணைக்க வேண்டும் என்று ஷிச்சின்பீங் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்