சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியின் சாதனை

கலைமணி 2018-04-11 10:55:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டு, சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியின் 40ஆவது நிறைவு ஆண்டாகும். கடந்த 40 ஆண்டுகாலத்தில், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும், பொருளாதார அமைப்பு முறையின் சீர்திருத்தத்திலிருந்து சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்கும், சீனா பெருமளவில் மாறி வருகின்றது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியில், சீனா பெற்றுள்ள சாதனைகளுக்கு நிறைய அரசியல் மற்றும் வணிக துறையினர்கள் பாராட்டு தெரிவித்தனர். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியை சீனா மென்மேலும் முன்னேற்றும் என்பதை போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில், சீன அரசுத் தலைவர் வெளியிட்டார். உலக பொருளாதாரத்தின் புதிய நிலைமையை இது உருவாக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

கடந்த 40 ஆண்டுகளில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியை முன்னேற்றுவதில் சீனா ஊன்றி நின்று வருகின்றது. உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாகவும், முதலாவது தொழிற்துறை வல்லரசாகவும், முதலாவது சரக்கு பொருள் வர்த்தக நாடாகவும், முதலாவது அன்னிய செலாவணி சேமிப்பு நாடாகவும் சீனா மாறியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, ஆண்டுக்கு சராசரியாக 9.5 விழுக்காடாக அதிகரித்து வருகின்றது.

கடந்த 40 ஆண்டுகளில், ஐ.நாவின் வரையறையின் படி, 70 கோடி சீனர்கள், வறுமையிலிருந்து விலகினர். இவ்வெண்ணிக்கை, உலகில் 70 விழுக்காடு வகித்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்குள், உலகில் மிக வறுமையான மக்களின் எண்ணிக்கை பாதியளவில் குறைக்கும் இலக்கை ஐ.நா நனவாக்குவதற்கு சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்று முன்னாள் ஐ.நா தலைமை செயலர் பன் கி மூன் தெரிவித்தார்.

அதேவேளையில், பொது மனித சமூகத்தை உருவாக்குவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆகிய சீனா வழங்கிய முன்மொழிவுகள், மேலதிகமான நாடுகள் மற்றும் மக்களின் வரவேற்பை ஈர்த்துள்ளன. பாகிஸ்தான் தலைமை அமைச்சர் அப்பாசி கூறியதாவது—

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, 21ஆவது நூற்றாண்டின் உலகத்தை உருவாக்கும். ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியும், பட்டுப்பாதை நிதியமும், வளர்ச்சிக்கான பணத்தை வினியோகிக்கும் மேடைகளாகும். நிதி திரட்டலுக்குத் தேவையான வளரும் நாடுகளையும் சர்வதேச நாணய நிறுவனங்களையும் இம்மேடை இணைக்கும் என்று பாகிஸ்தான் கருதுகின்றது என்றார் அவர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்