ஹைனான் தீவில் சுயேச்சை வர்த்தக சோதனை மண்டலம் மற்றும் சீனத் தனிச்சிறப்புடைய சுயேச்சை வர்த்தக துறைமுகம்

2018-04-13 20:07:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஹைனான் மாநிலம் மற்றும் அங்கு நிறுவப்பட்ட பொருளாதார சிறப்பு மண்டலத்தின் 30 ஆண்டு நிறைவு மாநாடு 13ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.

ஹைனான் தீவில் சுயேச்சை வர்த்தக சோதனை மண்டலம் மற்றும் சீனத் தனிச்சிறப்புடைய சுயேச்சை வர்த்தக துறைமுகத்தைக் கட்டியமைப்பதையும், இதற்கான கொள்கை மற்றும் அமைப்புமுறையைப் படிப்படியாக உருவாக்குவதையும் அரசு ஆதரிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலைமையைத் தொகுத்து ஆராய்ந்து பிறகு வகுத்த முக்கிய கொள்கை இதுவாகும் என்றும், வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி, பொருளாதாரத்தின் உலக மயமாக்கத்தை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதற்கான முக்கிய நடவடிக்கையும் இதுவாகும் என்றும் ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்