சிரியா சூழ்நிலை பற்றிய ரஷிய-ஈரான் அரசுத் தலைவர்களின் தொடர்பு

பூங்கோதை 2018-04-16 15:44:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், ஈரான் அரசுத் தலைவர் ஹாசன் ரௌஹானியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் சிரியாவின் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவது, சர்வதேச சட்டத்தை மீறிய செயல். அது சிரியா பிரச்சினையின் தீர்வுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மாஸ்கோ கிரெம்ளின் மாளிகையின் இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, இரு நாட்டு அரசுத் தலைவர்களும் சிரியா சூழ்நிலை குறித்து விரிவாக ஆலோசித்தனர். ஐ.நா சட்டதிட்டத்தை மீறிய இத்தகைய நடவடிக்கை மீண்டும் நிகழ்ந்தால், சர்வதேச சூழ்நிலை மேலும் பதற்றமாவதற்கு வழிவகுக்கும் என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்