சீனாவில் வடகொரிய தொழிலாளர் கட்சிக் குழு பயணம்

மதியழகன் 2018-05-15 16:59:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறையின் அழைப்பை ஏற்று, வடகொரிய தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பயணக் குழு ஒன்று, மே 14ஆம் நாள் முதல் சீனாவில் நட்பார்ந்த பயணம் மேற்கொண்டு வருகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் செவ்வாய்கிழமை உறுதி செய்தார்.

இந்த குழு, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு ஆகியவை தொடர்பான சாதனைகளைப் அறிந்து கொண்டு, நாட்டு நிர்வாகத்தில் இரு கட்சிகளின் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்