வட-தென் கொரிய பேச்சுவார்த்தை இடை நீக்கம்

வான்மதி 2018-05-16 09:46:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென் கொரியா மற்றும் அமெரிக்கா அண்மையில் வட கொரியாவுக்கு எதிரான பெரிய கூட்டு இராணுவப் பயிற்சி உள்ளிட்ட ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டதால், திட்டப்படி 16ஆம் நாள் தென் கொரியாவுடன் நடத்தும் உயர் நிலை பேச்சுவார்த்தையை வட கொரியா இடை நீக்கம் செய்தது. தென் கொரியாவுடன் இணைந்து தற்போதைய நிலைமையை உண்டாக்கிய அமெரிக்காவும், திட்டமிட்டப்பட்ட வட கொரிய-அமெரிக்க தலைவர்கள் சந்திப்பின் தலைவிதியை மீண்டும் யோசிக்க வேண்டும் என்று வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் 16ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

தென் கொரியாவின் முழு நாட்டிலும் 11ஆம் நாள் தொடங்கிய கூட்டு இராணுவப் பயிற்சி, பான்முன்ஜொம் அறிக்கைக்கு வெளிப்படையான அறைகூவலாகும். சீராகி வரும் கொரிய தீபகற்பத்தின் நிலைமைக்குப் புறம்பாக வேண்டுமன்றே மேற்கொண்ட இராணுவ தூண்டுதலாகும் என்றும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்