2050ஆம் ஆண்டுக்குள் சீன மக்கள் தொகை

2018-05-17 14:45:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக நகரமயமாக்கத்தின் எதிர்காலம் பற்றிய 2018ஆம் ஆண்டு திருத்தம் எனும் அறிக்கையை, மே திங்கள் 16ஆம் நாள், ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரப் பிரிவு வெளியிட்டது. இவ்வறிக்கையில் தொடர்புடைய தரவுகளின்படி, 2050ஆம் ஆண்டு, உலகளவில் நகரங்களிலுள்ள மக்கள் தொகை மேலும் 250 கோடி அதிகரிக்கும்.

புதிதாக உயர்ந்து வரும் நகரவாசிகளின் எண்ணிக்கையில், 90 விழுக்காட்டினர் ஆசியா மற்றும் ஆப்பிரிகாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா, சீனா, நைஜீரிய ஆகிய மூன்று நாடுகளின் நகரவாசிகள் எண்ணிக்கையில் உயர்வு இதில் 35 விழுக்காடு வகிக்கிறது. 2050ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் நகரவாசிகளின் எண்ணிக்கையில் 41 கோடியே 60 இலட்சம் அதிகரிக்கும். சீனாவில் 25 கோடியே 50 இலட்சமும், நைஜீரியாவில் 18 கோடியே 90 இலட்சமும் அதிகரிக்கும்.

தற்போது, 3 கோடியே 70 இலட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள மிகப் பெரிய நகராக ஜப்பானின் டோக்கியோ உள்ளது. இந்தியாவின் புதுதில்லி, சீனாவின் ஷாங்காய் ஆகிய நகரங்கள், அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்