அமெரிக்க முக்கிய உறுப்பினர்களுடன் லியூ ஹே சந்திப்பு

பூங்கோதை 2018-05-17 14:57:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு வருகின்ற சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனத் துணைத் தலைமையமைச்சரும், சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தைக்கான சீனப் பொறுப்பாளருமான லியூ ஹே, அமெரிக்க முன்னாள் வெளயுறவு அமைச்சர் ஹென்ரி கிஸ்ஸிங்கரையும், செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவையின் முக்கிய உறுப்பினர்களையும் மே 16ஆம் நாள் தனித்தனியாகச் சந்தித்துரையாடினார்.

லியூ ஹே பேசுகையில், சீன-அமெரிக்க நிலைத் தன்மை வாய்ந்த நீண்டகால ஒத்துழைப்பு உறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது. இதுதான், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. சீனா-அமெரிக்கா இடையே கருத்து வேற்றுமைகளை விட பொது நலன்களே மிக அதிகம். பொருளாதார மற்றும் வர்த்தக உறவிலுள்ள பிரச்சினைகளை, இரு தரப்பும் பன்முகங்களிலும் புறநிலையிலிருந்து அணுகியும், ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் நலன் அளிக்கும் கோட்பாட்டில் உகந்த முறையில் தீர்க்க வேண்டும் என்றார் அவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்