ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கவனம் ஈர்த்த ஷிச்சின்பிங்கின் உரை

2018-06-11 09:55:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு 10ஆம் நாள் பிற்பகல் ஷென் துங் மாநிலத்தின் ட்சிங் தாவ் நகரில் இனிதே நிறைவடைந்தது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இவ்வுச்சி மாநாட்டின் பெரிய அளவிலான பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கிய போது, ஷாங்காய் எழுச்சியை மேலும் பரவல் செய்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிதிகள் மற்றும் அறிஞர்கள் அவரது இக்கருத்தை வெகுவாக பாராட்டினர்.

மாநாட்டின் துவக்க விழா உரையில், ஷி ச்சின்பிங் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஹூசைன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களாக இவ்வுச்சி மாநாட்டில் முதன்முறையாக கலந்து கொள்வதற்கு வரவேற்பு தெரிவித்தார். இந்த உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் புதிய உறுப்பு நாடுகள் இணைந்த பிறகு நடைபெற்ற முதலாவது உச்சி மாநாடு என்றும், இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 17 ஆண்டுகளில், மாபெரும் சாதனைகளைப் பெற்று, அணி சேரா, பகைமையற்ற, மூன்றாவது தரப்புக்கு எதிர் இல்லாத என்ற ஆக்கப்பூர்வத் தன்மையுடைய கூட்டாளியுறவை உருவாக்கியுள்ளது. இது, சர்வதேச உறவுத் தத்துவம் மற்றும் நடைமுறையின் பெரிய புத்தாக்கமாகும். வட்டார ஒத்துழைப்புக்கான புதிய முன்மாதிரியைத் துவக்கி வைத்து, பிரதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கு புதிய பங்காற்றியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சீனாவுக்கான ரஷியத் தூதரகத்தின் அமைச்சர் நிலை அறிவுரைஞரும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயலகத்துக்கான ரஷியாவின் நிரந்தர உறுப்பினருமான லுஜியோங்சேவ் எமது செய்தியாளரிடம் கூறுகையில், பிரதேச மற்றும் உலக நிலைமை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள்ளான உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவை பற்றிய தெளிவான பகுத்தாராய்ச்சி தான் ஷி ச்சின்பிங்கின் உரை என்று தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது சமூகத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று உரையாற்றிய போது ஷி ச்சின்பிங் தெரிவித்தார். இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் எதிர்காலத்தில் பரந்துபட்ட ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாகிஸ்தானின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் அம்ஜத் அப்பாஸ் கருத்து தெரிவித்தார்.

அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் உரை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கான உரிய திசையை சுட்டிக்காட்டியுள்ளது என்றும், இவ்வமைப்பின் கட்டுக்கோப்புக்குள் மேலதிகமாக பங்காற்றுவதை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவுக்கான சீனத் தூதர் பம்பாவாலே தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மிகவும் கவனம் செலுத்தி வரும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளுக்கு இந்தியா கடந்த ஓராண்டில் தனது பங்கினை அளித்துள்ளது என்றும், எதிர்காலத்தில் இந்தியா மேலும் அதிகமாக பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.

இந்திய தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அபிஷேக் பிரதாப் சிங் தெரிவிக்கையில், பன்னாட்டுப் பண்பாட்டு பரிமாற்றம், உலக பொருளாதார ஒத்துழைப்பு, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை, வட்டார ஒத்துழைப்பு ஆகியற்றை வலுப்படுத்த வேண்டும் என்று அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உரையில் பலமுறை வலியுறுத்தியிருந்தார். இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வரவேற்பைப் பெற்றது. அத்துடன், உலக வளர்ச்சிக்குத் துணை புரியும் வகையிலும் உள்ளது என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்