ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டின் சாதனைகள்

2018-06-11 11:07:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டின் சாதனைகளை சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 10ஆம் நாள் அறிமுகப்படுத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், இவ்வமைப்பு நிறுவப்பட்ட பிந்தைய 17 ஆண்டுகால வளர்ச்சிப் போக்கினை மீளாய்வு செய்து, இவ்வமைப்பின் எதிர்கால வளர்ச்சி திசையை பன்முகங்களிலும் வகுத்து, முக்கிய பொது கருத்துக்களை எட்டியுள்ளனர். இவ்வுச்சி மாநாட்டில் மொத்தம் 23 ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன. சீனா மற்றும் இவ்வமைப்பின் இதர உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், மாநாட்டில் ஷாங்காய் எழுச்சி வலியுறுத்தப்பட்டது. இவ்வமைப்பின் பொது எதிர்கால சமூகம் பற்றிய கருத்து உருவாக்கப்பட்டது. அத்துடன், உலக நிர்வாகம் பற்றிய கருத்து முன்வைக்கப்பட்டது என்று வாங் யீ தெரிவித்தார்.

சீனா, பல்வேறு உறுப்பு நாடுகளுடன் இணைந்து, இவ்வுச்சி மாநாட்டின் சாதனைகளை பன்முகங்களிலும் செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்