வட கொரியா மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்புக்கு சர்வதேச சமூகம் வரவேற்பு

தேன்மொழி 2018-06-13 17:01:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரியா மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் 12-ஆம் நாள் சிங்கப்பூரில் சந்திப்பு நடத்தி கூட்டறிக்கையை வெளியிட்டனர். இரு தரப்புகளும் பேச்சுவார்த்தை மூலம் பகைமையைத் தளர்த்தி வட கொரிய அணு ஆயுதப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எடுத்துவைத்துள்ள முக்கிய காலடி இச்சந்திப்பு என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.

ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் 12-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தொடரவல்ல அமைதி, அணு ஆயுதமின்மை பன்முக அளவில் கண்காணிப்பு ஆகியவற்றை கொரிய தீபகற்பத்தில் நனவாக்குவதற்காக, இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை வரவேற்கின்றேன் என்று தெரிவித்தார். மேலும், இச்சந்திப்பினால்  பெறப்பட்டுள்ள முன்னேற்றங்களசாதனையின் நடைமுறையாக்குவதற்கு, சர்வதேச சமூகத்தின் பொறுமை மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது என்று குட்ரேஸ் இவ்வறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தவிர, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை பற்றிய வட கொரியா மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் வாக்குறுதிக்கு சர்வதேச அணு ஆற்றுல் நிறுவனம் வரவேற்பு தெரிவித்தது. வட கொரியாவில் பரிசோதனை மேற்கொள்ள தயராக உள்ளோம் என்றும் இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்