சீனாவின் புதிய தொழில் நுட்பப் பரிசோதனைக்கான இரட்டை செயற்கைக் கோள்கள்

ஜூன் 27ஆம் நாள் 11 மணி 30 நிமிடத்தில், சீனாவின் புதிய தொழில் நுட்பப் பரிசோதனைக்கான இரட்டை செயற்கைக் கோள்கள் ஷி ச்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-2சி ஏவூர்தியின் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது.
செயற்கை கோள்களுக்கிடையிலான பிணையத்தின் உருவாக்கம், தரையை நோக்கி ஆய்வு மேற்கொள்ளும் தொழில் நுட்பப் பரிசோதனை ஆகிய துறைகளில், இந்த இரட்டைச் செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.