தடையில்லா வர்த்தகத்தை ஆதரித்து வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை எதிர்க்க:ஜெர்மனி

மதியழகன் 2018-07-10 19:25:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

9ஆவது சீன-ஜெர்மன் பொருளாதாரத் தொழில் நுட்ப ஒத்துழைப்பு மன்றத்தின் நிறைவு விழா, ஜுலை 9ஆம் நாள் நடைபெற்றது. சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங், ஜெர்மன் தலைமை அமைச்சர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோர் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

சீனா-ஜெர்மனி இடையேயான ஒத்துழைப்பு, விரிவான மற்றும் சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்தி வருகிறது. சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பை தலைமையேற்றும் இந்த ஒத்துழைப்பு, பெரிய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் முன்மாதிரியாக விளங்குகிறது என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

ஏஞ்சலா மெர்க்கல் கூறுகையில்

வர்த்தகப் போர், அனைத்து நாடுகளையும் தாக்குவதுடன், ஒவ்வொரு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுடன் இணைந்து, தடையில்லா வர்த்தகத்தை ஆதரித்து, வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை எதிர்க்கும் ஒலியை எழுப்ப ஜெர்மனியும் விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்