வர்த்தகப் போரில் சீனாவில் அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேன்மொழி 2018-07-12 09:51:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் ஏற்பட்ட ஒரு வாரத்தில், புதிய நிலைமைகள் இடைவிடாமல் ஏற்பட்டு வருகின்றன. சீனப் பொருட்களுக்கு மீது கூடுதல் வரி விதிக்கும் புதிய பட்டியலை அமெரிக்கா 10-ஆம் நாள் வெளியிட்டது.

சீனாவின் தயாரிப்புப் பொருட்கள் மீது வெள்ளை மாளிகை தொடர்ந்து தற்காப்புத் தன்மை வாய்ந்த வர்த்தகத் தடையை உருவாக்கி வரும், ஆனால், புகழ்பெற்ற அமெரிக்க தொழில் நிறுவனங்கள் சீனாவில் நீண்டகால ஒத்துழைப்பை நாடி வந்த வண்ணம் உள்ளன.

ஜுலை 10-ஆம் நாள், அமெரிக்காவின் புகழ்பெற்ற மின்னுந்து வண்டி மற்றும் எரியாற்றல் தொழில் நிறுவனமான டெஸ்லா, ஷாங்காய் மாநகருடன் இணைந்து, மின்னாற்றல் மகிழுந்து தயாரிப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. சீனாவில் நிறுவப்படும் தொழிற்சாலை, வெளிநாடு ஒன்றில் இந்நிறுவனம் தொடங்கும் முதலாவது தொழிற்சாலையாகும். அதேபோல், ஜுலை 11-ஆம் நாள், அமெரிக்க சிக்காகோ மாநகராட்சித் தலைவர், பெய்ஜிங்கில், சீனத் தரப்புடன், 2018முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகால முக்கிய தொழில்துறை பற்றிய ஒத்துழைப்புத் திட்டத்தில் கையொப்பமிட்டார்.

வெள்ளை மாளிகை வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை பெரிதும் மேற்கொண்டு வரும் போதிலும், அமெரிக்காவின் உள்ளூர் அரசுகளும் தொழில் நிறுவனங்களும், நடைமுறைக்கு உகந்த நடவடிக்கை மூலம், வர்த்தகப் போரை எதிர்த்து வருகின்றன. அவர்கள் சீனச் சந்தை மீது நம்பிக்கை கொள்வதை இது காட்டுகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்