கட்சியின் அரசியல் கட்டுமானம் பற்றி ஷிச்சின்பிங் உத்தரவு

வான்மதி 2018-07-12 18:39:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங், மத்திய கமிட்டி மற்றும் அரசு வாரியங்கள் கட்சியின் அரசியல் கட்டுமானத்தை முன்னேற்றுவது குறித்து முக்கிய உத்தரவு பிறப்பித்தார். மத்திய கமிட்டி மற்றும் அரசு வாரியங்கள் அரசியல் வாரியங்களாகும். அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்து, கட்சியின் பன்முகத் தலைமையை உறுதியாக வலுப்படுத்தி, கட்சியின் அரசியல் கட்டுமானத்தை முன்னேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பல்வேறு நிலை கட்சிக் குழுக்களும் கட்சியைச் சேர்ந்த ஊழியர்களும் மத்திய கமிட்டியின் அதிகாரம் மற்றும் தலைமையைப் பேணிக்காத்து, மத்திய கமிட்டிக்கும் பொது மக்களுக்கும் மனநிறைவு தரக் கூடிய முன்மாதிரியான வாரியங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்