ட்செஜியாங் மாநிலத்தின் வளர்ச்சிக்கான உந்து ஆற்றல்

சரஸ்வதி 2018-07-18 12:47:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ட்செஜியாங் மாநிலத்தின் பரப்பளவு, சீனாவின் மொத்த பரப்பளவில் 1.1 விழுக்காட்டை மட்டுமே கொண்டுள்ளது. எனினும், இங்கு கடந்த ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை, சீனாவின் பல்வேறு மாநிலங்களில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகாளில், இம்மாநிலத்தின் தொழில் நிறுவனங்கள் ஆண்டுக்கு 100க்கும் அதிகமான வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் இது வரை, ஒரு பெரிய வர்த்தக மாநிலத்திலிருந்து தற்போதைய பெரிய திறப்பு அளவு வாய்ந்த மாநிலமாக ட்செஜியாங் மாறியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்செஜியாங் மாநிலக் குழுச் செயலாளராகப் பதவி ஏற்றார். அப்போது, இம்மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான எட்டு-எட்டு தொலைநோக்கு எனும் திட்டத்தை ஷிச்சின்பிங் வழங்கியுள்ளார். எதிர்கால வளர்ச்சியை நோக்கி, 8 துறைகளின் மேம்பாடுகளை விரிவாக்கி, 8 துறைகளில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது இத்திட்டத்தின் அம்சமாகும். இத்திட்டம், ட்செஜியாங்  மாநிலத்தின் மாபெரும் வளர்ச்சிக்கான உந்து ஆற்றலாக கருதப்படுகிறது.

இம்மாநிலத்தின் மேம்பாடுகளை வெளிக்கொணர்ந்து, ஷாங்காய் மாநகருடன் சேர்ந்து வளர்ந்து, யாஞ்சு ஆற்றின் கழிமுகப்பிரதேசத்துடன் ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் வலுப்படுத்தி, திறப்பு அளவைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்று 2003ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்செஜியாங் மாநிலக் குழுச் செயலாளராக இருந்த ஷிச்சின்பிங் கோரிக்கை விடுத்தார்.

பெரிய வர்த்தக மாநிலத்திலிருந்து பெரிய திறப்பு அளவு வாய்ந்த மாநிலமாக ட்செஜியாங் மாநிலத்தை மாற்ற வேண்டும் என்று 2004ஆம் ஆண்டு, இம்மாநிலத்தின் உயர் நிலை திறப்புப் பணிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய போது அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் நடைமுறையாக்கத்தை முன்னேற்றுவதற்கு முக்கிய மேடையாக, துறைமுகம் மாறியுள்ளது. இம்மாநிலத்தின் நிங்போ, சோஷான் முதலிய துறைமுகங்களுக்கு ஷிச்சின்பிங் சென்று பார்வையிட்டார். கடந்த ஆண்டில், இத்துறைமுகத்தின் மூலம் கையாளப்பட்ட சரக்குகளின் எடை 100 கோடி டன்னைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டின் இறுதி வரை, ட்செஜியாங் மாநிலத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை சீனாவில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் 179 நிறுவனங்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன. இங்கே நிறுவப்பட்ட வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 80 ஆகும். மொத்தம் 19 ஆயிரத்து 413 கோடி அமெரிக்க டாலர் அந்நிய முதலீடு செய்யப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்