வளர்ச்சி வேகத்திலிருந்து தரத்தில் கவனம் செலுத்தும் ட்சே ச்சியாங் பொருளாதார வளர்ச்சி

கலைமணி 2018-07-19 15:19:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சே ச்சியாங் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி செழுமையாகவுள்ளது. அதன் வளர்ச்சி வேகம், சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் முன்வரிசையிலிருந்து வருகின்றது. புதிய நூற்றாண்டில் நுழைந்த பிறகு, ஆக்கத் தொழிற்துறையை முக்கியமாக கொண்ட வளர்ச்சி வழிமுறை, சிக்கலான நிலைமையைச் சந்தித்துள்ளது. 2003ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ட்சே ச்சியாங் மாநிலக் கமிட்டியின் செயலாளராக பதவி ஏற்ற ஷி ச்சின் பிங், ட்சே ச்சியாங் பொருளாதார வளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய எட்டு எட்டு என்ற தொலைநோக்கு திட்டத்தை முன்மொழிந்தார். இத்திட்டம் ட்சே ச்சியாங் மாநிலத்தின் தொழிற்துறைமயமாக்கத்துக்கு வழிகாட்டியது. இதனால், ட்சே ச்சியாங் மாநிலத்தில் தகவல் பொருளாதாரத்தை மையமாகவும், புதிய பொருளாதாரத்தை தலைமையாகவும் கொண்ட நவீனப் பொருளாதார அமைப்பு இப்போது உருவெடுத்துள்ளது.

சே ச்சியாங் மாநிலத்தின் ஷு ச்சி நகரிலுள்ள டா தாங் காலுறை உற்பத்தி தளத்தின் புதுப்பிப்பு சேவை மையத்தின் பெரிய திரையில், காலுறை உற்பத்தி நிலைமை, வடிவமைப்பு நிலைமை, மின் வணிக அலுவல் ஆகியவை பற்றிய அம்சங்கள் வெளியிடப்பட்டன. மூலப் பொருட்களிலிருந்து, உற்பத்தி பொருட்களின் விற்பனை வரையிலான, 137 புள்ளிவிபரங்கள் இத்திரையில் காண்டிக்கப்படுவதாக இம்மையத்தின் துணைத் தலைவர் ஷு யா பின் விளக்கி கூறினார்.

பத்துக்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு, ட்சே ச்சியாங் மாநிலத்தின் ஆக்கத் தொழிற்துறை, குறைவான மையமான போட்டியாற்றல் மற்றும் தரம் என்ற சிக்கலை எதிர் நோக்கியது. முன்னிலைத் தன்மை வாய்ந்த ஆக்கத் தொழிற்துறை தளத்தை உருவாக்க விரும்பினால், தகவல்மயமாக்கத்தின் மூலம் தொழிற்துறைமயமாக்கத்தை வளர்த்து, தொழிற்துறைமயமாக்கத்தின் மூலம் தகவல்மயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும். தகவல்மயமாக்க ட்சே ச்சியாங்கை கட்டியமைக்க வேண்டும் என்று அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சே ச்சியாங் மாநில கமிட்டியின் செயலாளராகப் பணி புரிந்த ஷி ச்சின் பிங் தெரிவித்தார். 15 ஆண்டுகள் கழிந்து, தற்போது, சீனாவின் தகவல் பொருளாதார வளர்ச்சியின் மையமாக ட்சே ச்சியாங் மாநிலம் மாறியுள்ளது. அதோடு, தகவல் பொருளாதாரம் சே ச்சியாங் மாநிலத்தின் முதல் திட்டப்பணியாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான வேகத்திலிருந்து, உயர்வான தரத்தை நோக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ள எட்டு எட்டு என்ற தொலைநோக்குத் திட்டம், ட்சே ச்சியாங் மாநிலம் புதிய ரக தொழிற்துறை வளர்ச்சி பாதையில் வேகமாக வளர்ந்து வருவதற்கு வழிகாட்டுகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்