ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் சீனாவும் பிரிட்டனும்

சரஸ்வதி 2018-07-31 09:44:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மற்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜெரிமி ஹண்ட் ஆகிய இருவரும், 30ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், 9ஆவது சீன-பிரிட்டன் நெடுநோக்குப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, செய்தியாளர் கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தையில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் முக்கியமாக விவாதித்தனர். நிதி, சட்டம், புத்தாக்கம், 3ஆவது தரப்புடனான ஒத்துழைப்பு முதலிய துறைகளிலான ஒத்துழைப்புக்கான உள்ளார்ந்த ஆற்றல் அதிகம் என்ற இரு தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு வெளிப்படையாகவும் சகிப்புத் தன்மை வாய்ந்ததாகவும் விளங்குகிறது. இது தொடர்பான கட்டுமானம் உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி செயல்பட்டு வருகிறது என்று வாங்யீ மீண்டும் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்