வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் மிரட்டல் பயன் அளிக்காது

மதியழகன் 2018-08-02 20:20:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் மிரட்டல் பயன் அளிக்காது

20ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள சீனாவுக்கு விதிக்கப்படும் சுங்க வரி விகிதத்தை 10விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக உயர்த்த அமெரிக்கா சமீபத்தில் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம், டிரம்ப் அரசுக்கு கூடுதலான மற்று ஒரு வாய்ப்பு ஆகும். அதன் மூலம்,  சீனாவின் முடிவை மாற்றி விட முடியும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

இந்த “பெரும் செய்தி” வெளியிடப்பட்டதும், சர்வதேச செய்தி ஊடகங்கள் மற்றும் உலக சந்தையில் பிரபல தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி என்று அமெரிக்காவில் அதிகாரவர்க்கத்தினர் கருதினர்.

ஆனால், இந்த முறை, அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆகஸ்டு முதல் தேதியில், அமெரிக்க பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அமெரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனங்கள் வழக்கம் போல் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

அமெரிக்க வெள்ளைமாளிகை, சுங்க வரியை உயர்த்துவதாக அறிவித்த அதேசமயத்தில், சீனாவுடன் பேச்சுவார்த்தை மீண்டும் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து, சீன வணிக அமைச்சகம் பேசுகையில்,

உலகின் நலன்களையும், அமெரிக்காவின் விவசாயிகள், தொழில்முனைவோர், நுகர்வோர் ஆகியோரின் நலன்களையும் பொருட்படுத்தாமல், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வன்மை மற்றும் மென்மை ரீதியிலான முறையில் செயல்படும் ராஜ தந்திரம் பயன் அளிக்காது. அது, வர்த்தகப் போருக்கு எதிரான நாடுகளை ஏமாற்றும் செயல் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது.

உலகத்தின் பார்வையில், அரசியல், பொருளாதாரம், ராணுவம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அமெரிக்கா உறுதியான மேன்மைகளை கொண்டுள்ளது. இந்த சூப்பர் வல்லரசு ஆன அமெரிக்கா, கூட்டணி நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக இத்தகைய அச்சுறுத்தலை விடுத்துள்ளது ஏன்? இதுவே, அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது என்று கருதப்படுகிறது.

ஜுலை 6ஆம் நாள் சீனாவின் மீது வர்த்தகப் போர் தொடுத்தது முதல் தற்போது வரை டிரம்ப் அரசு எந்த உண்மையான முன்னேற்றத்தையும் பெறவில்லை. உலகம் முழுவதிலும் இத்தகைய வர்த்தகப் போர் நடக்க முடியாது. தற்போது அமெரிக்கா பொறுமை இழந்துள்ளது. டிரம்ப் அரசு, ஒருசார்பாக வர்த்தகப்போர் தொடுத்ததால் அமெரிக்க மக்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, உள்நாட்டு மற்றும் வெளிப்புறத்தில் இருந்து எழுந்து வரும் அழுத்தங்களை டிரம்ப் அரசு எதிர்கொள்கிறது. ஆனால், உரிய தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், டிரம்ப் அரசு முன்பு இருந்ததை போல் மீண்டும் செயல்பட்டு, அச்சுற்றுதல் மற்றும் மிரட்டலை தீவிரமாக்கி வருகிறது. தற்போது வரை, அமெரிக்கா மேற்கொண்டுள்ள அனைத்து  நடவடிக்கைகளும் பயன் அளிக்கவில்லை என்றால், அடுத்த கட்டத்தில் என்ன செய்யும் என்ற ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்