போர்ச்சுக்கல் நாட்டில் அதிக வெப்பம்!

மதியழகன் 2018-08-06 14:30:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

போர்ச்சுக்கல் நாட்டின் பல பகுதிகளில் சமீபத்தில் அதிக வெப்பம் ஏற்பட்டது. அந்நாட்டின் 26 மாவட்டங்களில் ஆகஸ்டு 4ஆம் நாள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.

நாடளவிலுள்ள 96 கண்காணிப்பு இடங்களில் 16 இடங்களில் அதிகப்பட்ச வெப்பம், 45 டிகிரி செல்சியஸுக்கு மேலாக பதிவாகியுள்ளது என்று போர்ச்சுக்கல் கடல் மற்றும் வானிலை ஆணையம் 4ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் அதிக வெப்பத்தால், 5ஆம் நாள் மாலை 5 மணி வரை, 39 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்