தன் நாட்டு பொருளாதாரத்தில் 60 விழுக்காட்டை எட்டிய நாடுகளின் மீது வர்த்தகப் போர்தொடுக்கும் அமெரிக்கா

கலைமணி 2018-08-10 17:45:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று 1600 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களின் மீது 25 விழுக்காடு கூடுதல் சுங்க வரி வசூலிக்கும் பெயர்ப் பட்டியலை வெளியிட்டன. இம்முடிவு ஆகஸ்ட் 23ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படும். அமெரிக்கா துவக்கிய வர்த்தகப் போரினால் வேறுவழியில்லாத நிலைமையில், சீனா முதல் சுற்று 5000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கான வர்த்தக சர்ச்சை உண்மையாக வந்து விட்டது.

உள் நாட்டு அரசியல் காரணங்களால், அமெரிக்கா சீனாவின் மீது கூடுதல் சுங்க வரி விகிப்புக் கொள்கையை மேற்கொண்டது. ஆனால், நீண்டகால வரலாற்றின் படி பார்த்தால், வெகுவாக வளரும் எதிர்த்தரப்பு நாடுகளை எதிரியை அமெரிக்கா தடை செய்ய விரும்பும். அமெரிக்காவின் தொலைநோக்கு திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

200 ஆண்டுகால வரலாறு மட்டும் கொண்ட அமெரிக்காவுக்கு விரைவாக வளரும் எதிர்த்தரப்பு நாடுகளின் வளர்ச்சியைத் தடை செய்யும் வழிமுறை நன்றாகத் தெரியும். இதன் அடிப்படையில், கடந்த நூற்றாண்டில், சோவியத் யூனியன், ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் வளர்ச்சியைத் தடை செய்தது. இவ்விரு நாடுகளின் பொருளாதார அளவு, அமெரிக்காவின் பொருளாதார நிலையில் 60 விழுக்காட்டைத் தாண்டியவுடன் அமெரிக்கா அந்நாடுகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதனால், 60 விழுக்காடு என்பது அமெரிக்கா பிற நாடுகளின் வளர்ச்சியைத் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்வதற்கான குறியீடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு அமெரிக்காவின் பொருளாதார மதிப்பில் 60 விழுக்காட்டை முதல் முறையாக தாண்டியது. அதனைத் தொடர்ந்தே, 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் சீனாவின் மீது அமெரிக்கா 301ஆவது பிரிவு புலன் விசாரணையை மேற்கொண்டது.

ஆனால், தற்போதைய சீனா அப்போதைய ஜப்பான் போன்ற ஒன்றல்ல.

சீனா, முதலாவதாக, உள் நாட்டுச் சந்தையையும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டப்பணியையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக, நிதானமான அரசியல் அமைப்பு முறையையும் நீண்டகாலமான வளர்ச்சித் திட்டத்தையும் உடையதாகத் திகழ்கின்றது. மூன்றாவதாக, உலகில் மிக முழுமையான தொழிற்துறையை கொண்ட நாடாக சீனா விளங்குகின்றது.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், சீனாவின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்