உலக நிர்வாகத்தின் புதிய வழிமுறை

கலைமணி 2018-08-28 18:30:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக நிர்வாகத்தின் புதிய வழிமுறை

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியின் 5ஆவது ஆண்டு நிறைவு பற்றிய கலந்துரையாடல் கூட்டம் அண்மையில், பெய்ஜிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் பேசுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை கூட்டாக்க் கட்டியமைப்பது, உலக நிர்வாக அமைப்பு முறையின் சீர்திருத்தத்துக்குப் பொருந்தியது. இவ்வாக்கப்பணி, உலக நிர்வாக அமைப்பு முறையை மேம்படுத்துவதற்கு புதிய கருத்துகளையும் புதிய திட்டங்களையும் வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியின் நவீன மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை ஷி ச்சின் பிங்கின் கருத்து விளக்கியுள்ளது. இவ்வாக்கப்பணி, சீனாவுக்கும் உலகத்திற்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மட்டுமல்லாமல், உலக நிர்வாக அமைப்பு முறையின் சீர்திருத்தத்தையும், மனித குலத்தின் தலைவிதி பொது சமூக உருவாக்கத்தையும் முன்னேற்ற வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணி, உலகப் பொருளாதார ஒத்துழைப்பை முன்னேற்றி வருவதோடு மட்டுமல்லாமல், உலக நிர்வாக அமைப்பு முறை மேம்படுவதற்கும் முயற்சி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்