அறிவுசார் சொத்துரிமை துறையில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளின் ஒத்துழைப்பு

சரஸ்வதி 2018-08-29 09:20:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை அறிவுசார் சொத்துரிமைக்கான உயர் நிலை மாநாடு 28ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தொடங்கியது. அனைத்தையும் உள்ளடங்குதல், வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு பயன் ஆகியவை இம்மாநாட்டின் தலைப்பாகும். தற்போதைய சர்வதேச அறிவுசார் சொத்துரிமை வளர்ச்சிக்கான புதிய முன்னேற்றப் போக்கு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் எதிர்நோக்குகின்ற அறிவுசார் சொத்துரிமை பிரச்சினைகள், எதிர்கால ஒத்துழைப்பு முதலியவை குறித்து, 60க்கு மேலான நாடுகளின் அறிவுசார் சொத்துரிமை நிறுவனங்களும், சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளும் கூட்டாக விவாதித்தன.

சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இது வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள ஏறக்குறைய 40 நாடுகளுடன் அறிவுசார் சொத்துரிமைக்கான இரு தரப்பு ஒத்துழைப்பை சீனா உருவாக்கியுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கமிட்டி, ஆசியான், யுரேசியா அறிவுசார் காப்புரிமை அமைப்பு முதலியவற்றுடன், சீனா ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் அறிவுசார் சொத்துரிமைக்கான பல தரப்பு ஒத்துழைப்பு அமைப்புமுறையை சீன அரசு உருவாக்குவதற்கு நன்றி தெரிவித்து, இவ்வமைப்புமுறையின் மூலம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்கிடையில் அறிவுசார் சொத்துரிமை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு நன்றாக விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்று உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைமை இயக்குநர் ஃபாராசிஸ் காரி 28ஆம் நாள் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் அறிவுசார் சொத்துரிமை ஆற்றலை அதிகரிக்க சீனா வாக்குறுதியளிதுள்ளது. இதற்கு நிதி உதவியை சீனா வழங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில், அறிவுசார் சொத்துரிமை பரிசீலனை துறையில், தொடர்புடைய நாடுகளின் ஒத்துழைப்புகள் பெரிதும் முன்னேற்றமடைந்துள்ளன. அறிவுசார் சொத்துரிமைக்கான பல தரப்பு ஒத்துழைப்பு அமைப்புமுறையைத் தொடர்புடைய நாடுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கருதுகின்றோம். அறிவுசார் சொத்துரிமை துறையிலான பல தரப்பு ஒத்துழைப்பு அமைப்புமுறைக்கான சீனாவின் வாக்குறுதிக்கும், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்புக்கான உறுதியான ஆதரவுக்கும் நாங்கள் மிகவும் நன்றி தெரிவிக்கின்றோம் என்று அவர் கூறினார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்