ஃபோர்ட், ஆப்பிள் அமெரிக்க நிறுவனங்கள் சீனச் சந்தைக்கு கவனம்

தேன்மொழி 2018-09-12 11:19:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வணிகப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி வசூலித்ததால், சிறிய ரக வாகனத்தை சீனாவில் தயாரித்து அமெரிக்காவில் விற்கும் திட்டம் ஒன்றை நீக்கும் சூழலுக்கு ஃபோர்ட் வாகனத் தொழில் நிறுவனம் அண்மையில் தள்ளப்பட்டது என்று அமெரிக்க ஊடகம் தெரிவித்தது. இது குறித்து அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் வெளியிட்ட சுட்டுரைத் தகவலில், ஃபோர்ட் நிறுவனத்தின் இந்த வாகனம், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படலாம் என்று தெரிவித்தார். இருப்பினும், ஃபோர்ட் நிறுவனம் 10-ஆம் நாள் செவ்வாய்கிழமை, டிரம்பின் ஆலோசனையை மறுத்தது.

அமெரிக்காவின் மிகப் பெரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், சீனாவின் வணிகப் பொருட்கள் மீது கூடுதல் வரி வசூலித்தால், தனது நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களின் செலவினங்கள் அதிகரிக்கும். இது, உலகளாவிய போட்டியில், ஆப்பிள் நிறுவன பொருட்களை சாதகமற்ற நிலைக்குக் கொண்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

எந்த நிறுவனங்களும் சீனாவின் விரிவான சந்தையை எளிதாக கைவிட்டு விட்டு தயாரிப்பில் ஈடுபட முடியாது. வர்த்தகப் போரைப் பயன்படுத்தி, புகழ்பெற்ற நிறுவனங்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து, வேலை வாய்ப்பைப் பெற முயற்சிக்கும் அமெரிக்க அரசின் செயல் தோல்வியிலேயே முடிவடையும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்