புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முயல வேண்டும்:ஐ.நா. வேண்டுகோள்

மதியழகன் 2018-10-09 16:28:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புவி வெப்பமயமாதலில் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வு என்ற சிறப்பு அறிக்கையை, காலநிலை மாற்றத்துக்கான அரசிடைக்குழு நேற்று திங்கள்கிழமை தென்கொரியாவின் இன்செயொன் நகரில் வெளியிட்டது.

புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த, உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் மற்றும் பன்னாட்டு வல்லுநர்கள் இவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை நிறைவேற்றும் வகையில், பல்வேறு நாடுகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் 2050ஆம் ஆண்டுக்குள் புசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் பூஜியம் நிலையை எட்டுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. மாநாடு தோல்வியடைய முடியாது. சர்வதேச சமூகம், பாரிஸ் உடன்படிக்கையின் நடைமுறையாக்கம் பற்றிய விரிவான விதிகளை எட்ட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்து கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்