சீனா எந்தவொரு நாட்டையும் கடன் பொறியில் சிக்கவைக்கவில்லை

கலைமணி 2018-10-11 16:56:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் அமெரிக்க அரசின் துணைத் தலைவர் பேன்ஸ், பன்முகங்களிலும் சீனாவின் மீது தாக்குதல் தொடுக்கும் வகையிலான கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதில், சீனா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா ஆகிய பிரதேசங்களுக்குப் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலரை அடிப்படை வசதி கடனாகக் கொடுத்துள்ளது. இதனால், இப்பிரதேசங்களிலுள்ள வளரும் நாடுகள் கடன் பொறியில் சிக்கிக்கொள்வதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே, சீனாவிற்குப் பதிலாக புதிய தேர்வை அமெரிக்கா இந்த நாடுகளுக்கு நிதி உதவியை வழங்கும் என்று பேன்ஸ் தெரிவித்தார்.

அண்மையில் மேலை நாடுகள் வேண்டுமென்றே கடன் பொறி பிரச்சினையைப் பரப்புரை செய்த போதெல்லாம் இலங்கையின் பெயர் அதிகம் பேசப்பட்டது. சீனத் தொழில் நிறுவனம் கட்டியமைத்த அம்பன்தோட்டா துறைமுகத்தினால், இலங்கை சீனாவிடமிருந்து நிறைய கடன் வாங்கியுள்ளது என்று பேன்ஸ் கூறினார்.

ஆனால், இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, இலங்கை சீனாவிடமிருந்து பெற்ற கடன், அந்நாட்டின் மொத்த கடனில் 10 விழுக்காடு மட்டுமே ஆகும். இக்கடனில் 61.5 விழுக்காடு கடன் தொகை, சர்வதேச வட்டி விகிதத்தை விட குறைந்த வட்டி விகித்த்திலேயே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை தலைமையமைச்சர் ரணில் விக்ரசிங்கே பேசுகையில், இலங்கை சீனாவின் கடன் பொறியில் சிக்கிக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

மதிப்பீட்டின் படி, 2020ஆம் ஆண்டில், இத்துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், இலங்கை அரசின் வருமானத்தில் 40 விழுக்காடு வகிக்கும்.  அதோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்தாயிரம் வேலை வாய்ப்புகளை தரும். இது நல்ல நடவடிக்கையாகும் என்றும் இதனால் இலங்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நிகழும் என்றும் அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்