சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் ஷிச்சின்பிங்கின் உரை பற்றி சர்வதேச சமூகத்தின் பாராட்டு

ஜெயா 2018-11-06 10:54:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் துவக்க விழாவில் நிகழ்த்திய உரையின் மீது, சர்வதேசச் சமூகம் பெரிதும் கவனம் செலுத்தி, வெகுவாகப் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஜெர்மனியின் டச்சு செய்துங் செய்தித்தாள், 5ஆம் நாள் ஷிச்சின்பிங் தனது உரையில், வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை சீனா உறுதியாக எதிர்க்கும் எனக் கூறியதையும், தாராள உலக வர்த்தக அமைப்பு முறையைத் தொடர்ந்து வளர்க்கும் என கூறியதையும் பாராட்டி எழுதியுள்ளது.

ஐரோப்பாவின் புகழ்பெற்ற சிந்தனைக் கிடங்கான ஆசிய ஆராய்ச்சி பற்றிய ஐரோப்பிய கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி ஆக்செல்கோய்தால்ஸ் 5ஆம் நாள் சிறப்புப் பேட்டியளித்த போது, ஷிச்சின்பிங்கின் உரை உலகிற்கு தாராள வர்த்தகம் பற்றிய ஆக்கப்பூர்வக் கருத்தைப் பரப்பியுள்ளது என்று தெரிவித்தார்.

அமெரிக்கா மேற்கொண்டுள்ள வர்த்தகப் பாதுகாப்புவாதம் என்ற கொள்கையின் பின்னணியில், சீனா உலகிற்கு தாராள வர்த்தகத்துக்கு பங்காற்றும் மனப்பாங்கை காட்டுகிறது என்று ஜப்பானிய தொலைக்காட்சி நிலையம் கருத்து தெரிவித்துள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்