சீனாவின் நுகர்வோர் விலைக் குறியீடு

கலைமணி 2018-11-09 14:56:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தேசிய புள்ளிவிபர பணியகம் 9ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, அக்டோபர் திங்களில், சி பி ஐ என்ற நுகர்வோர் விலைக் குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே போல் பி பி ஐ என்ற உற்பத்தியாளர் விலைக் குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததையும் கடந்த திங்களில் இருந்ததையும் விட குறைந்துள்ளது. வினியோகத்திற்கும் தேவைக்குமிடையிலான உறவின் படி, தற்போதைய நுகர்வு தேவையும், உற்பத்தி முதலீட்டுத் தேவையும் நிதானமாக உள்ளன. இதனால் இவ்வாண்டில் விலைவாசி நிதானமாக இருக்கும் என்று நிபுணர்கள் ஆய்வு செய்து தெரிவித்தனர்.

புள்ளிவிபரங்களின் படி, அக்டோபர் திங்களில் நுகர்வோர் விலைக் குறியீடு, செப்டம்பர் திங்களில் இருந்ததை விட குறைந்துள்ளது. உணவு விலை குறைந்ததே இதற்கான முக்கியக் காரணமாகும். இவ்வாண்டு முதல் 10 திங்களில், நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.1 விழுக்காட்டை அதிகரித்துள்ளது. அக்டோபர் திங்களில் நுகர்வோர் விலைக் குறியீட்டின் மாற்றத்தைக் கடந்த ஆண்டோடு ஒப்பு நோக்குகையில் சமமாகவுள்ளது என்று சீன அரசவை வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார ஆய்வகத்தின் ஆய்வாளர் சாங் லி ஜுன் தெரிவித்தார். சாங் லி ஜுன் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய வினியோகம் மற்றும் தேவை நிலைமையின் படி, நுகர்வு தேவையும் உற்பத்தி முதலீட்டு தேவையும் நிதானமாகவுள்ளன. இவ்வாண்டில் விலைவாசி சீராக இருக்கும் என்றார் அவர்.

அக்டோபர் திங்களில், உற்பத்தியாளர் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. முக்கிய துறைகளான, கச்சா எண்ணெய், நிலக்கரி, இதர எரிபொருட்களின் உற்பத்தித் துறைகளின் விலை அதிகரிக்கும் விகிதம், குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்தல் ஆகிய துறைகளில் விலை அதிகரிப்பதற்குரிய விகிதம் அதிகரித்துள்ளது. ரசாயன நார் உற்பத்தி துறையின் விலை குறைந்துள்ளது. கடந்த காலத்தில், மேற்கொள்ளப்பட்ட சில கொள்கை காரணங்களால், உற்பத்தியாளர் விலைக் குறியீடு மாறி வருகின்றது. எதிர்காலத்தில் இக்குறியீடு பெருமளவில் குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்று சீனாவின் ஜியாவ் துங் வங்கியின் முதன்மை பொருளியலாளர் லியன் பிங் தெரிவித்தார்.

சீனா, உணவுகள், தொழிற்துறை நுகர்வு பொருட்கள், உற்பத்தி மூலவளத்தின் முதலீட்டுப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஆற்றல் மிக்க நாடாகும். இந்த அடிப்படையில், எதிர்காலத்தில் விலைவாசி நிதானமாக இருப்பதற்குரிய வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்