தேசியப் பன்நோக்க தீயணைப்பு மற்றும் மீட்புதவி அணி

தேன்மொழி 2018-11-09 15:35:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் தேசியப் பன்நோக்க தீயணைப்பு மற்றும் மீட்புதவி அணி நிறுவப்பட்ட விழா, நவம்பர் 9-ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இவ்விழாவில் உரைநிகழ்த்தியபோது, பேரழிவு அபாயக் குறைப்பு, மீட்புதவி, சமூகப் பொதுப் பாதுகாப்பைப் பேணிக்காப்பது, உயிர் மற்றும் உடமையைப் பாதுகாப்பது ஆகிய துறைகளில், தீயணைப்புத் துறையினர்கள் ஆற்றிய முக்கிய பங்கினைப் பாராட்டினார்.

முந்தைய பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த தீயணைப்புப் படைப்பிரிவு, ஆயுதக்காவல்துறையின் காட்டுப் படைப்பிரிவு ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு, தேசிய பன்நோக்க தீயணைப்பு மற்றும் மீட்புதவி அணி உருவாக்கப்பட்டுள்ளது. இது, அவசர உதவி மேலாண்மை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்