சீன-அமெரிக்க வர்த்தகத்துக்கான முக்கிய மூன்று திங்கள்

தேன்மொழி 2018-12-04 10:14:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அர்ஜென்டீனாவில் சந்திப்பு நடத்தினர். கூடுதல் சுங்கவரி விதிப்பு உள்ளிட்ட வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதென இரு தரப்பினரும் முடிவெடுத்தனர். அடுத்த 90 நாட்களுக்குள், இந்தப் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வை விரைவுப்படுத்தி, உடன்படிக்கையை உருவாக்க இரு நாடுகளும் பாடுபடும்.

கடந்த 8 திங்களுக்கும் மேல் தொடர்ந்த வர்த்த சர்ச்சையில், இரு நாடுகளின் பொருளாதாரத்துக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளன. புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் அக்டோபர் திங்களில், அமெரிக்காவின் சரக்கு வர்த்தகத்தின் சாதகமற்ற நிலுவை, 7720கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாற்றில் மிக அதிக பதிவை எட்டியது. அமெரிக்காவுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தொகை, 2017ஆம் ஆண்டில் 27ஆயிரத்து 500கோடி டாலர் என்று உச்சநிலையில் இருந்தது. ஆனால், அத்துடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில், 28ஆயிரத்து 320கோடி அமெரிக்க டாலர் குறைந்து விட்டது.

அறிவு சொத்துரிமைப் பாதுகாப்பு, தொழில் நுட்ப ஒத்துழைப்பு, சந்தை நுழைவுக்கு அனுமதி வழங்குதல், கட்டணவீதமல்லா தடுப்புமுறை உள்ளிட்ட அமெரிக்கா முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக, சீனத் தரப்பு தனது கருத்தை முழுமையாகத் தெரிவித்துள்ளது. சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புத் திசைக்குப் பொருந்திய அம்சங்கள், அடுத்த 3 திங்களில், மேற்கொள்ளப்படும் கலந்தாய்வில் முக்கியமாக விவாதிக்கப்படும். மேலும், சீனா கடுமையாகக் கவனம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு, அமெரிக்கா பதில் அளித்துள்ளது.

அடுத்த 3 திங்களில் மேற்கொள்ளப்படும் கலந்தாய்வுப் போக்கு மிகவும் கடினமாகவும் சிக்கலாகவும் இருக்கும். வர்த்தகப் போரில் எதிர்தரப்பு நிர்பந்தம் அளித்து வரும்போதும், சீனாவின் நிலைப்பாடு, எப்போதும் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கின்றது. நாட்டின் மைய நலன் மற்றும் மக்களின் அடிப்படை நலனை உறுதியாகப் பேணிக்காக்க வேண்டும் என்பதுவே அந்த நிலைப்பாடாகும்.

அடுத்த மூன்று திங்களில், சீனா, இரு நாட்டு கூட்டு நலன்கள் மற்றும் உலக வர்த்தக ஒழுங்கைப் பேணிக்காப்பது என்ற பொது நிலைமையைக் கருதி, இயன்ற அளவில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும். இந்தப் போக்கில், ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் சமத்துவ அடிப்படையில், நேர்மையாகக் கலந்தாய்வு மேற்கொண்டு, உரிய முறையில் சர்ச்சையைக் கையாண்டால், இரு தரப்புகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். கூட்டு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்