ஷிச்சின்பிங்கின் பயணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சர் கருத்து

இலக்கியா 2018-12-06 09:46:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 20 நாடுகள் குழுவின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டது, ஸ்பெயின், ஆர்ஜென்டீனா முதலிய நாடுகளில் பயணம் மேற்கொண்டது ஆகியவை குறித்த சாதனைகள், சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

வாங் யீ கூறுகையில், ஷிச்சின்பிங்கின் பயணம், முக்கியமாக 4 அம்சச் சாதனைகளைப் பெற்றுள்ளது. முதலாவதாக, இப்பயணம், இருபது நாடுகள் குழுவின் ஒத்துழைப்பை முன்னேற்றுகிறது. பரஸ்பர நம்பிக்கையையும் தொடர்பையும் அதிகரிக்கும் நிலையில் பெரிய நாடுகளின் நட்புறவு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக, இப்பயணம், சீன-ஸ்பெயின் மற்றும் சீன-போர்ச்சுக்கல் ஒத்துழைப்பை ஊக்குவித்ததோடு, சீன-ஐரோப்பிய உறவுக்கு உயிராற்றலையும் கூட்டியுள்ளது. மூன்றாவதாக, சீன-ஆர்ஜென்டீனா மற்றும் சீன-பனாமா உறவு, மேலும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. கூட்டு நலன் பெறும் அடிப்படையில் சீன-லத்தின் அமெரிக்க ஒத்துழைப்பு, இப்பயணம் மூலம் மேம்பட்டுள்ளது. நான்காவதாக, சீன வளர்ச்சிப் பாதை சிந்தனை உள்ளிட்டவை குறித்து ஷிச்சின்பிங் விளக்கமளித்தார். இப்பயணத்தின் போது சுயநம்பிக்கை, பொறுமை ஆகியவை கொண்ட சீனாவின் உருவம், உலகிற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்