ஐஎன்எஃப் ஒப்பந்தத்தை மீறும் ஏவுகணை சோதனைக்கு ரஷியா மறுப்பு

வான்மதி 2018-12-07 18:30:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐஎன்எஃப் எனப்படும் இடைதூர அணு ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட ஏவுகணை பாயும் அளவை அத்துமீறும் இஸ்கண்டர்-எம் ரக ஏவுகணையின் சோதனையை ரஷியா மேற்கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு ரஷியாவுக்கு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ரஷியா ஏற்றுக் கொள்ளாது. ரஷிய நாடாளுமன்ற கீழ் அவையின் தேசிய பாதுகாப்பு குழுத் தலைவர் விளாடிமிர் ஷமநோவ் 6ஆம் நாள் நடைபெற்ற கீழ் அவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனின் 1987ஆம் ஆண்டு டிசர்பரில் கையொப்பமிட்ட ஐஎன்எஃப் ஒப்பந்தத்தின்படி, தரையிலிருந்து 500 முதல் 5500 கிரோமீட்டர் வரையில் பாயும் ஏவுகணையை இருநாடுகளும் ஒழிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, ரஷியாவும் அமெரிக்காவும் ஒன்றின் மீது ஒன்று இவ்வொப்பந்தத்தை மீறியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும், ஐஎன்எஃப் ஒப்பந்தத்தின் பன்முக நடைமுறையாக்கத்தை ரஷியா மீட்காமல் இருந்தால் 60 நாட்களுக்குப் பின் அமெரிக்கா இவ்வொப்பந்தத்தை செயல்படுத்தும் கடமையை தற்காலிகமாக நிறுத்தும் என்று நடப்பு திங்கள் 4ஆம் நாள் அமெரிக்கா தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்