சீன அரசுத் தலைவர், வடகொரிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

மதியழகன் 2018-12-07 18:45:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோவைசந் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ஷிச்சின்பிங் கூறியதாவது:

சீன-வடகொரிய தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு நிறைவு அடுத்த ஆண்டு ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு, சீன-வடகொரிய உறவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதுவே, நாம் நிலைத்து நிற்கும் மாறாத கோட்பாடாக உள்ளது. தற்போது, இரு நாட்டுறவில், புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 70ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சியை வாய்ப்பாக கொண்டு, இரு தரப்புறவின் நிலையான சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு, கொரிய தீபகற்பத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும் வடகொரியாவும், ஒரே திசையை நோக்கிச் சென்று கூட்டாக செயல்பட்டு, தீபகற்பத்தின் அமைதிப் பேச்சுவார்த்தையில் இடைவிடாத முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

ரி யோங் ஹோ இச்சந்திப்பில் பேசுகையில்

சீனாவுடன் இணைந்து, 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நடத்துவதன் மூலம், பழைய நட்புறவை மேம்படுத்தி, இரு தரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த வடகொரியா விரும்புகிறது. கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மை நிலையை நனவாக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வரும் வடகொரியா, பிராந்திய அமைதி மற்றும் நிலைப்புதன்மை குறித்து சீனாவுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு மேற்கொள்ள விரும்புகிறது என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்