வெளிநாட்டுத் திறப்பு மேலும் உயர்த்தப்படும்:பணிக் கூட்டத்தில் முடிவு

வான்மதி 2018-12-23 16:28:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பணிக் கூட்டம் டிசம்பர் 21, 22 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 2019ஆம் ஆண்டில், வெளிநாட்டுத் திறப்பு அளவை மேலும் உயர்த்துவது, உள்நாட்டுச் சந்தையை பெரிதும் வளர்ப்பது, பல்வகை நடவடிக்கைகளின் மூலம் உண்மை பொருளாதாரத்தை குறிப்பாக நவீன ஆக்கத்தொழிலை வலுப்படுத்துவது உள்ளிட்ட 8 துறைகளிலான பணிகள் முக்கியமாக மேற்கொள்ளப்படும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ஹே லிஃபேங் இக்கூட்டத்தில் பேசிய போது, முன்பை விட மேலும் பெரும் மனவுறுதியுடன் வலிமைமிக்க நடவடிக்கையின் மூலம் பொருளாதார அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை விரைவுப்படுத்த வேண்டும். நிர்வாகத்தை சீராக்குதல் அதிகாரத்தை வழங்குதல் மற்றும் சேவை தரத்தை உயர்த்துதல் தொடர்பான சீர்திருத்தத்தை ஆழமாக்கி, நிர்வாக நடைமுறைகளை எளிதாக்கும் சீர்திருத்தத்தை முன்னேற்ற வேண்டும். தொழில் புரிவதற்கு உகந்த சூழல் மதிப்பீட்டு முறைமையை விரைவாக முழுமைப்படுத்தி, நாடளவில் வணிகச் சூழலின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்