சீனாவின் தனிநபர் வருமான வரி பற்றிய புதிய சட்டம்

ஜெயா 2018-12-25 14:00:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் புதிதாகத் திருத்தப்பட்ட தனிநபர் வருமான வரிச் சட்டமும், புதிதாக வெளியிடப்பட்ட சிறப்புத் திட்டங்களில் தனிநபர் வருமான வரி விலக்கு பற்றிய தற்காலிகமான வழிமுறையும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தப்பட உள்ளன. சீன நிதி அமைச்சகம், சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறுகையில், சிறப்புத் திட்டப்பணிங்களில் தனிநபர் வருமான வரி விலக்கில், குறைக்கப்படும் தொகை, மக்களின் கைகளுக்குக் கொண்டு சேர்க்கப்படும். இது, சந்தையின் நம்பிக்கையை அதிகரித்து, பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றும் என்று தெரிவித்தனர்.

இந்த முறை தனிநபர் வருமான வரி சீர்திருத்தத்தில், சிறப்புத் திட்டங்களில் தனிநபர் வரி விலக்கு முக்கிய அம்சமாகும். எதிர்காலத்தில், சீனாவில் வரி செலுத்துபவர்கள், தனிநபர் வருமான வரியைக் கணக்கிடும் போது, குழந்தைக் கல்வி, தொடர்ச்சி கல்வி, கடும் நோய்க்கான மருத்துவச் சிகிச்சை, வீட்டுக் கடன் வட்டி அல்லது வாடகைச் செலவு, பராமரிப்பு ஆகிய 6 சிறப்புத் திட்டங்களில் வரி விலக்கைப் பெற முடியும்.

சீன நிதி அமைச்சகத்தின் துணைத் தலைவர் செங்லீஹுவா அம்மையார் 24ஆம் நாள் கூறுகையில், இந்தமுறை சீர்திருத்தத்தில், பல நடவடிக்கைகள் கூட்டாக நடத்தப்பட்டு, அடிப்படையான விலக்கு வரையறை உயர்த்தப்பட்டு, சிறப்புத் திட்டங்களை நிறுவப்பட்டு, வரி விகிதக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். இதன் மூலம், வரி வழங்குபவர்களின் வரி சுமையைக் குறைத்துள்ளது என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தகவல் முறைமை மேம்பாடு, தரவுப் பகிர்வு ஆகிய பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். வாரியங்களுக்கிடையில் தகவல் பகிர்வு மற்றும் பரிமாற்றத்தின் மூலம், வரி வழங்குபவர்களைவரி விலக்குக் கொள்கையின் நலன்களை முழுமையாகவும் வசதியாகவும் அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சீனாவில் வெளிநாட்டுப் பணியாளர்களும் ஹாங்காங், மக்கௌ, தைவான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும், வெளி பிரதேசங்களில் பெறும் வருமானங்களுக்கு, இந்த விதிக்குப் பொருந்தும் என்பதால் அவர்களுக்கும் சலுகை கிடைக்கும். திறப்புப் பணியை விரிவாக்கி, வெளிநாட்டுத் திறமைசாலிகளை கவர்வதற்கு இது துணை புரியும் என்றும் அவர் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்