ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது பற்றிய பிரிட்டனின் வாக்கெடுப்பு

ஜெயா 2019-01-09 09:41:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கை பற்றி ஒத்திப்போடப்பட்ட வாக்கெடுப்பு 15ஆம் நாள் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நடைபெறவுள்ளது என்று பிரிட்டன் தலைமையமைச்சர் மாளிகை 8ஆம் நாள் தெரிவித்துள்ளது.

திட்டப்படி கடந்த டிசம்பர் திங்கள் இந்த வாக்கெடுப்பு நடைபெறயிருந்தது. ஆனால், ஒரு நாளுக்கு முன்பாக வாக்கெடுப்பை ஒத்திவைப்பதாக தலைமையமைச்சர் டெரேசா மே அறிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இவ்வுடன்படிக்கையிலுள்ள பல முக்கிய அம்சங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். ஆனால், அதற்குப் பிறகு அயர்லாந்து நாட்டுடனான எல்லைப் பிரச்சினை பற்றி பரந்த ஆழமான ஐயம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்