சீரான முடிவுக்கு இரு தரப்புகளின் கூட்டு முயற்சி தேவை

வாணி 2019-01-10 16:11:54
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய துணை அமைச்சர் நிலை பேச்சுவார்த்தை 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. ஆர்ஜென்டீனாவில் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் விதம் இரு தரப்புகள் நடத்திய முதலாவது நேருக்கு நேர் பேச்சுவார்த்தை இதுவாகும். இதன் மூலம் இரு தரப்புகள் ஒன்றை ஒன்று மேலும் புரிந்து கொண்டு தத்தம் அக்கறை கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் குறிப்பிட்ட அடிப்படையை எட்டியுள்ளன.

சீன-அமெரிக்க வர்த்தக சர்ச்சை தீவிரமடைந்த கடந்த 9 திங்களில், இரு தரப்புகளும் மட்டுமல்லாமல் உலகமும் அதன் பாதிப்பை உணர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் திங்களில், சீனாவுடனான அமெரிக்காவின் சாதகமற்ற வர்த்தக நிலுவை 5050 கோடி டாலருடன் கடந்த 6 ஆண்டுகளில் மிக உயர் பதிவாகியுள்ளது. அதனுடன், கடந்த டிசம்பர் திங்களில் பிஎம்ஐ எனும் சீனாவின் ஆக்கத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாண்மைக் குறியீடு 50 விழுக்காடு என்ற எச்சரிக்கை கோட்டுக்குக் கீழ் வந்துள்ளது. உலகளவில் பார்த்தால், 2018ஆம் ஆண்டில் முழு உலக சரக்கு வர்த்தக அளவில் 0.3 விழுக்காடு சரிவு காணப்பட்டது.

ஆகவே, இறுதி பொருளாதாரம் மற்றும் வர்த்தக உடன்பாட்டை எட்டுவது சீனா மற்றும் அமெரிக்காவின் கூட்டு விருப்பம் மட்டுமல்லாமல், முழு உலகின் எதிர்பார்ப்பும் ஆகும்.

சர்ச்சையைத் தீர்ப்பதற்காக சீனா இயன்ற அளவில் நல்லெணத்தை வெளிப்படுத்தி வருகிறது. சீரான முடிவை எட்டுவதற்கு இரு தரப்புகளின் தொடர் கூட்டு முயற்சி தேவை.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்