வெனிசூவேலா அரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழா

சிவகாமி 2019-01-11 10:45:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும் வேளாண்மை மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சருமான ஹான் ட்சாங்ஃபு ஜனவரி திங்கள் 10ஆம் நாள் வெனிசூவேலா தலைநகரான கராகஸில் அந்நாட்டின் அரசுத் தலைவராகப் பதவியேற்ற நிக்கோலாஸ் மடுரோவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார். மடுரோவை அவர் 8ஆம் நாள் சந்தித்துப்பேசினார்.

இவ்வாண்டு, இரு நாடுகளும் தூதாண்மை உறவைக் கட்டியமைத்த 45வது ஆண்டு நிறைவாகும். முக்கிய வாய்ப்பை இறுகப்பற்றி, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய முக்கிய ஒத்த கருத்துக்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஹான் சாங்ஃபு தெரிவித்தார்.

சீனாவுடனான நட்பார்ந்த உறவை வெனிசூவேலா அரசு மற்றும் மக்கள் பேணி மதித்து வருகின்றனர். என்றும், சீனாவுடன் உயர் நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்த விரும்புவதாகவும் மடுரோ தெரிவித்தார்.



இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்