சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கம்

பண்டரிநாதன் 2019-01-11 15:45:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் இயக்குநர் அலோக் வர்மா, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினால், அப்பதவியிலிருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டார். புதிய சிபிஐ இயக்குநர் நியமிக்கப்படும் வரைய அல்லது இது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை அப்பணிகளை சிபிஐ-யின் கூடுதல் இயக்குநர் நாகேஷ்வர் ராவ் மேற்கொள்வார் என்று அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மோடி தலைமையிலான 3 பேர் அடங்கிய குழுவில், நீதிபதி ஏகே சிக்ரி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கர்கே ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். அலோக் வர்மாவின் நீக்கத்துக்கு மோடி மற்றும் சிக்ரி ஆதரவாகவும், மல்லிகார்ஜுன் கார்கே எதிராகவும் முடிவெடுத்தனர்.

முன்னதாக, கடந்த அக்டோபரில் அலோக் வர்மாவை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், கடந்த செவ்வாய்க்கிழமை, மத்திய அரசின் உத்தரவை உச்சநீதி மன்றம் ரத்து செய்து, வர்மாவை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியது. இருப்பினும், வர்மாவின் பதவி குறித்து 3 நபர் குழு இறுதி முடிவெடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்