சீனாவின் பங்கிற்கு ஐ.நா. பொது பேரவைத் தலைவர் பாராட்டு

வான்மதி 2019-01-16 18:20:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா, ஐ.நாவின் முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாகும். பலதரப்புவாதத்துக்கு உறுதியான வாக்குறுதி அளித்துள்ள சீனா, தலைசிறந்த நாடாகும் என்று ஐ.நா. பொது பேரவைத் தலைவர் மரிய ஃபெர்னாண்டா ஏஸ்பினோசா அண்மையில் சீன செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.

70 கோடிக்கு மேற்பட்ட மக்களை வறுமையிலிருந்து விடுவித்துள்ள சீனாவின் அருஞ்செயல் தனக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இது உண்மையான மாபெரும் வெற்றியாகும். ஐ.நாவின் 2030ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவதில் சீனா தலைமை ஆற்றலாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்