சீன-நேபாள எல்லை நுழைவாயில் செய்தி தவறானது: நேபாள அதிகாரியின் கருத்து

ஜெயா 2019-01-22 10:47:26
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாள-சீன எல்லை நுழைவாயிலான கிமதங்க பற்றி அண்மையில் நேபாள செய்தி ஊடகம் ஒன்று தவறான செய்தியை வெளியிட்டது குறித்து, நேபாள கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திர கௌதம் 16ஆம் நாள் உண்மையான நிலைமையை வழங்கினார்.

எல்லை ஆற்று அருன் ஆற்றின் நேபாளப் பக்கத்தில் வெள்ள தடுப்பு அணைப்பைக் கட்டி, இரு கரை மக்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பைப் பேணிக்காக்க விரும்புவதாகவும் இது பற்றி சீனா ஆக்கப்பூர்வமான பதில் வழங்கும் என நம்புவதாகவும் கடந்த நவம்பர் திங்கள் கிமதங்க நுழைவாயிலில் பயணம் மேற்கொண்ட போது சீனாவின் தொடர்புடைய வாரியங்களிடம் முன்வைத்துள்ளேன். இது பற்றி, நான் நேபாளச் செய்தியாளருடன் தொலைபேசியில் பரிமாற்றம் மேற்கொண்டுள்ளேன். ஆனால், எனது கருத்து குறித்து அவருக்கு தவறான எண்ணம் ஏற்பட்டது. எனது தலைமையிலான பிரதிநிதிக் குழு, சீனத் தரப்புடன் கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளது. இரு தரப்புகளின் மனப்பான்மை மிகவும் நட்பார்ந்ததாக இருக்கிறது. நேபாளச் செய்தி ஊடகத்தின் தகவலில், செய்தியாளரின் சொந்த கருத்து சேர்க்கப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் இந்த நுழைவாயிலின் பாதுகாப்பு மீதான எங்கள் கவலை பெரிதாக்கப்பட்டுள்ளது என்று கௌதம் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்